பக்கம்:கவிதை உள்ளம்.pdf/66

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கவிதை யுள்ளம்



உன்னை மறந்துஉயிர் வாழேன் - அன்றி
உலகில் நிலைத்தசுகம் காணேன் - பெரும்
அன்பின் வழிஇயங்கும் அன்னாய் - இசை
ஆகிச் சிறந்தஅருட் கடலே. (இன்பம்)

கேளா திருக்கின்நலம் உறுமோ - உனைக்
கேட்டால் வருமோஒரு துயரும் - பொல்லா
மீளா வினைஅகலும் உன்னால் - அன்றி
வேணும் நலமனைத்தும் பெருகும். (இன்பம்)

வாழ்வாய் நலம்பெருக்கும் இசையே - இந்த
மண்ணில் அன்பைவளர் கதியே - நிதம்
சீர்பாய்ந்து வாழ்ந்திடு பல்லாண்டே - உந்தன்
செம்மைப் பதம்பணிந்தேன் வாழி! (இன்பம்)



64

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கவிதை_உள்ளம்.pdf/66&oldid=1387588" இலிருந்து மீள்விக்கப்பட்டது