பக்கம்:கவிதை உள்ளம்.pdf/67

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

குயிற் பத்து


நாவிடை இனிமை பயிலும் நற்குயிலே இது கேளாய்
பாவிடை பயின் றிட்டாய் பகரும் அதன்நலம் பாராய்
ஓவிய மாக உருக்கும் உயர்ந்த இயற்கையில் வாழ்ந்தே
தாவித் திரியும்நீ சற்றே சாய்த்தென் மொழிசெவி சாராய்!
செந்தமிழ் மொழிஎங்கும் ஓர்நாள் சிறந்து விளங்கிய தன்மை
இந்த நிலமெலாம் ஓரும் என்பதைக் கண்டிடு வாயே!
பைந்தமிழ்ப் பாடி இசைந்தே பரமன் அருள்பெறச் சென்றே
சொந்த இசைவழி நிற்பாய் தூய்மை உளமுடைக் குயிலே!
வாயிங்கே நீகுயிற் பிள்ளாய் வான வர் யாவரும் போற்றும்
தூய்மைை நிறைதமிழ் தானே சொல்லு மிடமெலாம் நிற்கும்
வாய்மை மறந்திடா வாழ்க்கை வாழும் தமிழர் நலமே
ஆயும் பொழுதினி லெல்லாம் ஆனந்த மாகிடக் கூவாய்!
முத்தமிழ் மொழிநலம் கண்டே முகிழ்த்து நிறைந்திடு சோலை
அத்தனை யும்சுற்றி நிற்கும் ஆனந்த மாய்வரு குயிலே!

65

5

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கவிதை_உள்ளம்.pdf/67&oldid=1387599" இலிருந்து மீள்விக்கப்பட்டது