பக்கம்:கவிதை உள்ளம்.pdf/69

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தமிழ்


வேண்டும் பொருளைப் பெறுவாய் வேண்டியே பெற்றவர் பல்லோர்
ஈண்டும் பெறுபவர் உண்டு இன் தமிழ்ப் பாட்டிசைத் திங்கே
கூண்டி லடைபடா தெங்கும் கூவித் திரிந்திடு குயிலே
ஆண்டவன் பாதமும் பெற்றே ஆனந்த முற்றிடக் கூவாய்!

தோன்றிய கால மறியாத் தூய்மைத் தமிழ்தனை ஓதின்
யாண்டும் புகழ்பெற்று வாழ்வாய் யாதினுக்கும் அஞ்சல் வேண்டா
பூண்ட நலம்பல பொங்கும் பூந்தமிழ்ச் சோலையிற் குயிலே

வேண்டியே செந்தமிழ் ஓசை விண்முட்டும் வரையிலே கூவாய்!



 

விக்கிரமப்புரட்டாசித்தமிழ்க்கலை ஆண்டுமலரில் வெளிவந்தது.

67

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கவிதை_உள்ளம்.pdf/69&oldid=1387611" இலிருந்து மீள்விக்கப்பட்டது