பக்கம்:கவிதை உள்ளம்.pdf/7

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

5

தந்தேன். அவரே இந்நூலில் பாடல்கள் பகுத்துள்ள வகையில் அவற்றை வரிசைப் படுத்தினார். பின் தமிழ் பற்றிய கவிதைகளைத் தன் கருத்தரங்கக் கட்டுரைக்குக் கருவாகக் கொண்டார். பிறவற்றைப் பற்றியும் எழுதி வைத்துள்ளதாகவும் கூறினார். (வாய்ப்பு நேருமேல் அவற்றைத் தொகுத்துப் பிறகு வெளியிட நினைக்கிறேன்.) அவர் தம் கருத்தரங்கக் கட்டுரையே அறிமுகமாக இந் நூலின் முதலில் அமைந்துள்ளது.

எங்கோ அசாம் மாநிலத்தில் பணியாற்றும் அன்பர் ஒருவர் என் கவிபாடும் திறத்தை எப்படியோ அறிந்து, என் கையாலேயே எழுதிய கவிதையைக் கேட்டார். அவர் கடிதமும் நூலின் 24ம் பக்கத்தில் உள்ளது. அவருக்குப் பதிலாக ‘மனிதனாக வாழ’ என்ற கவிதையை எழுதி அனுப்பினேன். பின்னும் சில கவிதைகள் இயற்றியுள்ளேன். எனினும் அனைத்தையும் தொகுத்து வைக்கவில்லையாதலால், இந் நூலில் ஒரு பகுதியே இடம் பெற்றுள்ளது. பிறவும் கிடைப்பின் பின் வெளியிட நினைக்கிறேன். சிறப்பாகத் ‘தணிகை அந்தாதி’ (100 பாடல்) ‘தணிகைப் பதிகம்’, ‘தணிகை முருகன் தண்ணருள் வேட்டல்’ முதலியன தற்போது கிடைக்கவில்லை. இவையும் பிறவும் கிடைப்பின் பின்னர் வெளிவரும்.

கருத்தரங்கத்தில் என் கவிதைகள் பற்றிக் கேட்ட அறிஞரும் பிறரும் அவற்றைத் தொகுத்த வெளியிட வேண்டுமென வற்புறுத்தியதாலேயே இந்நூல் வெளிவருகின்றது. இவற்றுள் பெரும்பாலான இன்றைக்கு முப்பதாண்டுகளுக்கு முன் எழுதியவை. என் முந்திய நாட்களை எண்ணிப் பார்க்க இவை எனக்கு உதவுகின்றன. அன்று நான் கண்ட கனவு களுள் சில நனவாக நின்றாலும், பல இன்னும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கவிதை_உள்ளம்.pdf/7&oldid=1387501" இலிருந்து மீள்விக்கப்பட்டது