பக்கம்:கவிதை உள்ளம்.pdf/70

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

குயிலே நீ கூவாய்!

என்னுடை இன்னிசைக் குயிலே எங்கள் தமிழ்மொழி கேட்கின்
முன்னம் எந்நாளினில் உலகில் முகிழ்த்தது எனக் கணக் கியலா
பின்னதன் வளர்ச்சியைப் பார்ப்பின் பேசும் நலம் பல பெற்றே
மன்னி எந்நாளும் வளரும் மாண்பினை எண்ணி கூவாய்! (1)

இன்பம் தருவது குயிலே எம்முடைத் தமிழ்மொழி யாமே
அன்பின் அருள்நெறிய யாலே அனைத்தையும் செலுத்திடு மொழியே
கன்னித் தமிழ்எனப்பேசக் கான் முளை பலப்பல தந்தே
மன்னி தன்இளமை மாறாது வாழும் மொழியிதைக் கூவாய் (2)

ஏர்தரும் ஏழுல கேத்த எம்மொழிக்கும் பிறப் பிடமாய்
ஆர்கலி சூழுல கதனில் அன்றுபோ லின்றுமே என்றும்
பேர்நிலை மாற்ற மில்லாமல் பேச்சிலும் எழுத்திலும் உயர்ந்தே
சார்பவர் வாழ்வை வளர்க்கும் தனித்தமிழ் நீஇதைக் கூவாய் (3)



68

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கவிதை_உள்ளம்.pdf/70&oldid=1387618" இலிருந்து மீள்விக்கப்பட்டது