பக்கம்:கவிதை உள்ளம்.pdf/71

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வள்ளுவரை உள்ளிடுவீர்!

கேளுங்கள் தமிழ்மாந்தரே - உங்கள்
கேண்மை மிகுபுலவன் கிளவி யெல்லாம்
வாழுங்கள் வாழ்வினிலே-நீவிர்
வளம்பெற்று வாழ்வதெல்லாம் வழங்கிநின்றான்
உலகிலே ஒருபுலவன் - அவனே
உவமை ஒருவரின்றே ஓங்கிநின்றான்
தெய்வக் குறளிசைத்தான் - அதன்
செம்மை நலமுழுதும் செப்பரிதால்
உய்வை மிகஅளித்தான் - தமிழர்
உயர்வுக்கு ஒருநிலை கோலிவைத்தான்
எத்தகை நாட்டினரும் - மற்று
எம்மொழி பயில்பவ ராயீடினும்
மெத்தவும் போற்றுகின்றார் - குறளை
மேலாம் நிலையினிலே ஏத்துகின்றார்
வள்ளுவன் நம்மிடையே - இன்பம்
வளர்க்கவே வந்துதித்தான் வண்டமிழே
சொல்லுவீர் இதை அறிவீர் - மேலைத்
துகளறு நாட்டினர் போற்றுகின்றார்
செல்வமே செல்வமென்றார் - அதன்
செம்மையே தமிழர்க்குச் சீவன் என்றார்
இதை அறி தமிழர்களே! - உங்கள்
இதயம் அவனிடத்து ஏகிடுமோ?
அறம் பொருள் இன்பமென்றே - அவனும்
அளந்து அளந்துபல நிலை யுரைத்தான்
கடவுளைக் காட்டுவித்தான் - பின்னே
கார்நிலை தவநிலை அறநிலையும்

69

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கவிதை_உள்ளம்.pdf/71&oldid=1387624" இலிருந்து மீள்விக்கப்பட்டது