பக்கம்:கவிதை உள்ளம்.pdf/72

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கவிதை யுள்ளம் முறைமையே விளக்குவித்தான்-பின்னர் முகிழ்க்கும் இல்லறவகை மொழிந்துகின்ருன் இருநூறு குறளதற்கே-பின்னர் ஏகும் துறவறத்தை எடுத்துரைத்தான் ஒருநூற்று நாற்பதாக-உணர்ந்து உயர்ந்த அறநிலையை உறுதிசெய்தான் பொருள் நிலை காட்டவந்தான்-அதிலே பொங்கு அரசியலும் ஒழிபியலும் அதன்ாடு அங்க இயல்-முறையே ஐயைந்து காலெட்டு பதின்மூன்ரும் அதிகாரங் தொகுத்துகின்ருன்-பின்னர் அடுக்கிய அன்புகிலே காட்டும் வகையில் களவெனக் கற்பெனவே-இரண்டைக் காட்டித் தமிழ்மணத்தைக் கூட்டிவிட்டான் களவுக்கு எழுபதிட்டான்-பின்னே கற்பிற்கு நூற்றெண்பது குறளமைத்தான் அனைத்திலும் உயிரமைத்தான்-யாவும் ஆயிரத்து முன்னூற்று முப்பதென்றே கிலேயினைக் காட்டிவிட்டான்-உலகில் கிலேயாயிருக்கும் நூலே நிறுவிச்சென்ருன் வீட்டினேக் குறிப்பினலே-விளக்கி வீட்டினை விழைந்தவன் விரைந்துவிட்டான் அவன்புகழ் கேட்டீரோ-தமிழீர் அவனியில அவன்திருநாள் அமைப்பீர்! *வைகாசி அனுட மென-அவன்றன் வளம்பாடும் நாள்தனே வரைந்துவிட்டார் அன்புடைத் தமிழர்களே-உங்கள் அருமை மொழிகிலேக்க அவதரித்தான் வள்ளுவன் புகழ்பேசுவீர்-அன்றேல் * தற்போது மாட்டுப் பொங்கலன்று வள்ளுவன் விழாவிை கொண்டாடுகின்றனர் 70

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கவிதை_உள்ளம்.pdf/72&oldid=783109" இலிருந்து மீள்விக்கப்பட்டது