பக்கம்:கவிதை உள்ளம்.pdf/73

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தமிழ்


வண்தமிழர் என்றுரைக்க வாய்கூசுவீர்
உல்கெலாம் அவன்பெருமை - ஓர்ந்து
உயர்ந்திடு நிலையில்நாம் ஊமையராய்
நிலவிடல் நீதியன்றே - என்றும்
நிலைத்தபுகழ் தமிழ்க்கு நேர்ந்திடுமேல்
வள்ளுவன் பிச்சையன்றோ! - இதைநீர்
மனத்திடை உணர்ந்தவன் வளம்புகழ்வீர்
வள்ளுவன் புகழ்பேசும் - வாயே
வண்டமிழ் வளர்த்திடும் வாயாகும்!
ஆகவே கூடிடுவீர் - ஒன்றாய்
அனுடநன் னாளில் ஆற்றிடுவீர்!
வள்ளுவன் பெருவிழாவே - அதனால்
வளம்பெறும் தமிழ்மொழி வாழ்வடையும்
குறள்மொழி போற்றிடுவீர் - உங்கள்
குழந்தைகள் இளமொழி குறளெனவே
நிலவிடச் செய்திடுவீர் - என்றும்
நிலைத்திடும் நூலது நேர்மையதே
சாதி மதச் சுழிகடந்து - மற்றச்
சார்புடன் காலநிலை தனைக்கடந்து
ஓதுதற் குரியதுவே - நீவீர்
ஒன்றிய அவன்புகழ் ஓதிடுவீர்!
தமிழ்மொழி தழைததோங்கும் - உலகில்
தமிழர்தம் அரசே தலைநிமிரும்
பாடுவீர் அவன் புகழே - இன்பம்

பல்கி அறம்வளர்ந்து பயன்மிகுமே (கேளுங்கள்)


விசு, ஆனி, க,(15.6-41)ல் தமிழ்க்கலையில் வெளியானது.

71

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கவிதை_உள்ளம்.pdf/73&oldid=1387637" இலிருந்து மீள்விக்கப்பட்டது