பக்கம்:கவிதை உள்ளம்.pdf/75

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சமயம் -கல்லிடை மணியிடைக் கனக வெளியில் காரிடை நீரிடைக் கருமை நிறத்தில்

புல்லிடை அவளுரு கண்டிடல் வேண்டும்

புன்மைக் குணமெலாம் போக்கிடல் வேண்டும். வஞ்சகம் பொய்ம்மை மடிந்திடல் வேண்டும் வானமும் மண்ணுமே வணங்கிட வேண்டும் எஞ்சலி லாத அறச்செயல் வேண்டும் எவ்விடத்தும் அதை இயம்பாமை வேண்டும் அஞ்சுபயம் தவிர்த் தன்னையின் துணையே அனைத்தையும் அளித்திடும் என்பதை எண்ணி விஞ்சிய நிலையினில் விளங்கிட வேண்டும் வித்தகர் உறவையே வேண்டிட வேண்டும். காவிடை மந்திரம் நவின்றி.டல் வேண்டா நாடொறும் ஊர்சுற்றித் திரிந்திட வேண்டா பாவிடை மனமிலாப் பண்ணது வேண்டா பற்றிய புட்பமும் பழமதும் வேண்டா கோயிலே காடியே கும்பிட வேண்டா கோபுரம் தனக்கண்டு வணங்கிட வேண்டா ஆவியில் அன்பினை அமைத்திடல் ஒன்றே அன்னைப் பெரும்பணி ஆவது கண்டாய்! அன்னையைக் காணவே அலேந்திடல் ஏனே அடியவர் உளமதில் அமர்ந்திடு வாளே பொன்னினில் அழகினில் புக்தியி லெல்லாம் பொற்புடன் விளங்கிடு புண்ணியச் செல்வி 73

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கவிதை_உள்ளம்.pdf/75&oldid=783112" இலிருந்து மீள்விக்கப்பட்டது