பக்கம்:கவிதை உள்ளம்.pdf/81

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பொய் வணக்கம் போக்குவீர்

செத்தமிழ் நாட்டுறைவீர் - நீங்கள்
சேர்ந்து நலம்பெறுவீர் சாந்தமுடனே
வந்ததில் வாடியிலே - மக்கள்
வாயில்லா உயிர்களை வாட்டுகின்றார்
அந்தோ மிகக் கொடுமை - அவர்
அனியாயமாகத் தெய்வ வழிபாடென்று
சிந்தையில் ஒன்றெண்ணித் - தினமும்
செம்மறி யாடுகோழி பன்றிகளைக்
கொன்று மிகக்குவிப்பர் - அவர்தம்
கொடுமைகளை அடக்க ஒருவரில்லை
நந்தமிழ் நாட்டினிலே - தெய்வம்
நாடிஒன் றாகக்கொண்டு வாழ்ந்திட்டனர்
இன்றோ இச்செயலால் - அந்தோ
எள்ளுகின்றார் பிறர் விள்ளுகின்றார்
தமிழர்கள் செயலிதுவோ - பொல்லாத்
தயவிலா மனத்துடன் சாய்கின்றனர்
வாயில்லாப் பிராணிகளை - பூசாரி
வயிற்றில் நிரப்புவதற்கு நடப்பதுவே
அம்மம்ம எந்நாட்டில் - இந்த
அநியாயம் நடந்திடும் அடக்கிடுவீர்!
பத்தினித் தெய்வமொன்றாம் - அதற்குப்

பாங்குடன் கணவர்கள் ஐந்துபேராம்

79

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கவிதை_உள்ளம்.pdf/81&oldid=1387652" இலிருந்து மீள்விக்கப்பட்டது