பக்கம்:கவிதை உள்ளம்.pdf/82

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கவிதை யுள்ளம்


வித்தகமாய் உதவ - அருகில்
வேண்டுமொரு தெய்வமாய் நாடிடுமாம்
இத்தகைத் தெய்வமதைத் - தமிழர்
ஏனோ வணங்கி நலன் இழக்கின்றனர்
செங்குட்டுவன் அளித்த - சீர்சால்
தெய்வக் கற்பின் தலைவி கண்ணகியின்
பொங்கிடு மாவணக்கம் - இந்தப்
பூமியெங்கும் ஓர்கால் புகுந்கதவே!
கற்புடைத் தெய்வமென - அவளைக்
காணரும் அரசர்கள் வேண்டி நின்றார்
அற்புதம் அவள் பெருமை - தனது
அரிய கணவனுடன் வானடைந்தாள்
பொற்றொடி அவள் பெயரால் - நின்ற
பொய்யில் பத்தினித்தெய்வ வழிபாடு
இப்பொழு திந்நிலத்தே - தமிழர்
இடையிலே கொடுமையைாய் இரிந்ததுவே!
எங்கோ ஒருமகளாம் - அவட்கு
இருந்த கணவர் ஐவர் மனமகிழ
அதிசயம் இதுவல்லவோ - நமது
அரிய தமிழர் நிலை சீர்கெடவே
இடையிலெப் பாவிகளோ - இதை
இந்தநன் னாட்டினில் ஏற்றிவிட்டார்
பொய்க்கதை பலபாடி - ஒன்றும்
புகலாத மாக்களை ஏமாற்றி
துற்குணம் நிறைந்தவனாய் - பூசாரி

சொல்லொணாப் பொழுதினைப் போக்குகின்றான்

80

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கவிதை_உள்ளம்.pdf/82&oldid=1387531" இலிருந்து மீள்விக்கப்பட்டது