பக்கம்:கவிதை உள்ளம்.pdf/84

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மரணத்தின் மாட்சி

ஓ ஓ மரணமே உன்னரும் மரணமே
பேருல கதனில் பெயர்த்திடாப் பொருளே
உன் செயல் உன்னில் உளம்நடுங் குறுமால்
என்னென் றிசைப்பேன் என்உளம் நடுங்குறும்
நேர்மை உடையை! நீதியும் பெருமையும்
ஆர்கலி யுலகில் அழியா ஆண்மையும்
பெற்றனை நீயே பிறங்கிடு வாயே!
வேறுபா டொன்றும் வேண்டக் காணாய்
கூறுபா டாகக் குறிப்பாய் உயிரை
உன் எதிர்ப் பட்டோர் உய்வரோ சொல்வாய்
நின்பெருஞ் செயலை நிறுத்துவோர் உண்டோ
மரணம் என்னும் மாபெருந் தலைவ!
இரணம் செய்வோர் இல்லைநீ காண்பாய்
கற்றா ராயினும் உற்றா ராயினும்
மற்றா ராயினும் மாறுபா டுண்டோ!
மணிமுடி சூடி மாபெருந் தலைவனாய்
அணிசெங் கோல்கொண் டவனியை ஆளினும்
மதிசால் தலைவன் என்னினும் மற்றெக்
கதிசேர் உரிமைக் கருத்தமைத் தேற்றினும்
உன் வழிப்பட்டால் உய்வதும் உண்டோ!
நின்பெருந் தன்மையில் நேர்மையே சிறக்கும்
அரசினை இயற்றும் அண்ணலும் உன் தன்

பெருமைசேர் அடியில் பெயர்ந்து அங்கிருக்கும்

82

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கவிதை_உள்ளம்.pdf/84&oldid=1387535" இலிருந்து மீள்விக்கப்பட்டது