பக்கம்:கவிதை உள்ளம்.pdf/85

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சமயம்


அற்றைக் கூழுக் கலமரும் ஏழையின்
உற்றா ரெனவே உன்னப் படுவான்
ஆதலான் மரணமே ஆகுமோ வேற்றுமை!
தீதிலா இச்செயல் செம்மாப் புறுவோற்
கேற்றதோர் பாடமாய் இயைகின் றதுவே
மாற்றார் இல்லா மாபெருந் தலைவ!
ஒளி முடிசூடி உலகினை யாண்ட
தெளிவுடை அரசர் சென்றனர் உன்னிடம்
இறவா தொழிந்தார் இந்நிலத் துளரோ?
கரவா உன்வயிற் கடந்தோர் உண்டோ!
முன்னறி வித்தால் மோசம் வருமோ!
என்னோ யார்க்கும் இயம்பா வழியில்
வந்துயிர் கொள்ளும் வளஞ்சால் செல்வ
மக்கள் ஒருபுறம் மடிய மற்றவர்
ஒக்கல் ஒருபுறம் உளநடுங் கிடுவார்
தாயினைப் பிரிப்பாய் தந்தையைக் குலைப்பாய்
மேயநின் செயல்கள் விளம்பலும் உண்டோ!
எப்போ தீண்டு ஏகுவாய் என்று
இப்புவி தன்னில் எண்ணப் படுமோ!
உன்பெரு மாயம் என்மொழிக் கடங்குமோ!
கூடிக் குவிக்கக் கொடும்போர் வகுப்பாய்!
வாடும் மக்கள் வாட்டம் தவிராய்!
அந்தோ நீதான் ஆளா தொழியில்
இந்த மாநிலம் இடம் பெற்றிடுமோ!
உன் விருப்பாக உயர்ந்தோர் கொண்டு
மன்பதை தன்னில் மற்றைத் திப்பியாம்

83

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கவிதை_உள்ளம்.pdf/85&oldid=1387663" இலிருந்து மீள்விக்கப்பட்டது