பக்கம்:கவிதை உள்ளம்.pdf/86

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கவிதை யுள்ளம்



பொல்லார் தம்மைப் பொலிக பன்னாளென
நில்லா வாழ்வில் நிறுத்துவாய் இதுகேள்
அத்தகைக் கொடியர் அவனியில் திகழின்
வித்தக ரெல்லாம் வீணில் கெடுவர்
ஆகவே உன் செயல் அவர் மீதிரங்கிப்
பாகம் வேறாகப் பண்ணுதல் வேண்டா.
நல்லோர் வாழ அல்லோர்க் கருளின்
ஒல்வா நின்செயல் உயர்வுடைத் தாகும்
அன்றேல் உலகில் அநீதியும் அவதியும்
ஒன்றாய்த் தீங்கை உறுவித் திடுங்கொல்
வேற்றுவை யாக்கும் மேதக் கோயே!
சாற்றும் என்மொழி ஏற்றுநீ ஈண்டு
நல்வழி கொண்டு நல்லோர் வாழ்ந்து
நல்லுல காக்க நாடிடு வாயே!
உன்செயல் உன்னி உள்ளத் திடையான்
என்பெறி னும்தான் இல்லார்க் கிட்டு
வாழ்ந்திடச் செய்து வாழ்வினில் சிறக்க

ஆழ்ந்திடத் தீயதே! அவனிஓங் குகவே!



84

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கவிதை_உள்ளம்.pdf/86&oldid=1387669" இலிருந்து மீள்விக்கப்பட்டது