பக்கம்:கவிதை உள்ளம்.pdf/89

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சமயம் அறையின் அப்பெருங் துன்பமே அன்னவர்க் கடை தரு மானங்த நிறையை தங்தது. ஆதலால் நெஞ்சமே துேயர்க் கஞ்சாதே! துன்பம் உற்றிடில் அன்றியே சுகமுறல் சொல்லவும் கூடாது இன்ப மாளிகை துன்பமாம் அடியின்மேல் ஏற்றிய உயர்கோயில் அன்பில் ஆண்மையில் ஆண்டவன் உடைமையின் ஆவன இவையாவும் என்ப தோர்குவை இன்பமும் துன்பமும் இடைவிடா தன கண்டாய். ஆகையால் இதை அமைத்திடு உளமதில் ஆற்றுவாய் வருந்துன்பம் ஒகையே யென உளத்திடை உன்னியே உஞற்றிடுவாய் நன்றே! சாகை யாகிய கொடுந்துயர் சாரினும் சற்றுங் தளராமல் ஒகை ஒகையென் ருேலமே லிட்டினி உயர்ந்திடு கல்நெஞ்சே! துன்ப ஆக்கமே சுகமதற் கடிப்படை சொல்லிடில் பலகோடி இன்ப உண்மைகள் எண்ணலாம் இவைகளை எண்ணியே கல்லோராய்த் துன்ப நேரினும் சுகமது அருளினும் சொல்லொழித் தொன்ருகும் என்று வாழ்வதே மாந்தரின் கடமையாம் என்பதால் வாழ்வோமே!

  • விசு, ஆடி, க, (3-7-41)ல் தமிழ்க்கலையில் வைளியானது

87

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கவிதை_உள்ளம்.pdf/89&oldid=783127" இலிருந்து மீள்விக்கப்பட்டது