பக்கம்:கவிதை உள்ளம்.pdf/90

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சோதனையும் சாதனையும்
(கும்மி)


வாழ்க்கை நாம் வாழ்வதற் கிந்கிலத்தே வந்து
வலியப் பிறந்தனம் கேட்டிடுவீர்-பொல்லா
வாழ்க்கைச் சுழலிடை நாம் சுற்றிநின்றுமே
வழியை அறியாது வாடுகின்றோம்

பொய்தனை மெய்யென்று யெண்ணிடுவோர் பலர்
பூமியில் நின்றெமைப் புண்படுத்தி-உயர்
மெய்ம்மை வழிகளை மூடிடுவார் அவர்
மேலாஞ் செயல்தனை நாடுகின்றோம்

இன்பம் இன்பம் என ஏங்குகின்றோம் எனில்
எல்லா வகைத் துயர் உந்துகின்றோம்-பல
துன்பச் செருக்குகள் சூழ்ந்து வருத்திடு
துயரை உடன் கொண்டு துவள்கின்றனம்

சோதனை வாழ்க்கையில் தோன்றிடுமே-பல
துன்ப நிகழ்ச்சிகள் கான்றிடுமே-மிக
வேதனை தந்துமே வாட்டுவதால் மனம்
வீணில் மடிவது கண்டிலிரோ!

சோதனை வெல்பவன் வீரனவன் புகழ்ச்
சொல்லுவதென்னாளும் இன்பமதே-மனச்
சாதனை வேண்டுவ துங்களுக்கே பின்னர்
சாதித்தல் யாவையும் கூடுவதே!

இயேசுவின் சோதனை எத்துணை தான் அவர்
எல்லாம் இறையருளாலே வென்றார்-மிக
மாயம் பல செயல் மறைத்திட நின்றாலும்

மாபெரும் புத்தரே வளமடைந்தார்.

88

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கவிதை_உள்ளம்.pdf/90&oldid=1387607" இலிருந்து மீள்விக்கப்பட்டது