பக்கம்:கவிதை உள்ளம்.pdf/92

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அன்னையின் அருள் நலம்

உன்னை நினைக்கையிலே-என
துள்ள ழுருகுது கள்ள மறையுது
அன்னை பராசக்தியே-இந்த
அவனியில் எனை ஒரு மகனென ஆண்டிடு
கன்னியே பெற்றவளே-எங்கும்
காணற் கரிய உன் பொன்திரு மேனியை
முன்னியே காட்டினேயே-இனி
முத்தி அளித்தருள் சத்திய அன்னையே (உன்னை)

வாழ்வெனும் வெள்ளமெலாம்-இனி
வற்றிடப் பற்றிலாச் சுற்றமே அற்றிடத்
தாழ்வுடன் நாள் கழிப்பேன்-எனைத்
தாங்கி அருளவே தண்ணளி காட்டினை
ஆழ்கடல் வங்தவளே-என்றன்
அன்னை பராசக்தி ஆனந்த வெள்ளமே
வாழ்ந்திடச் சொல்லுவையே-நானும்
வற்றல் மரமில்லை வாழ்ந்திடுஎன்றிடும்
(உன்னை):

காஞ்சியில் வாழ்ந்திருந்தேன்-அங்கே
காத்து வளர்த்திட்ட அன்னையர் இருவரைக்
காஞ்சிநிலை உணர்த்தி-உன்றன்
கட்புலம் காண்கிலா விட்புலம் கொண்டனே
ஓங்கிடு சென்னையிலே-வந்து
உற்றபணி செய உள்ளத்து எண்ணிப்பின்
வாங்கியே ‘வாழ்’ வகற்றி-எனை
வற்றல் மரமாக்கி இற்றைவந் தருள்செயும்
(உன்னை)

90

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கவிதை_உள்ளம்.pdf/92&oldid=1387622" இலிருந்து மீள்விக்கப்பட்டது