பக்கம்:கவிதை உள்ளம்.pdf/93

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சமயம்




கண்மணி யானவளே-இந்தக்
காருல கதனிலே கதியற்ற பாவியேன்
உண்ணவுந் தருவாரிலே-இனி
உலகினில் வாழ்வதால் ஒருபயன் எனக்கிலை
என்நினைந் தேங்கிநின்றேன்-எனக்
இன்ப நிலைதர எங்கிருந்தோ வந்து
தண்ணளி செய்தணைத்தாய்-என்றும்
தாங்கி அருள்செய ஓங்கிய உள்ளத்தாய்
(உன்னை)

இளமையில் வாழ்விழந்தேன்-பின்னர்
இடையிலே பெற்றதை ஏனோகொண் டோடினை
வளமையெலா மிருந்தும்-வெறும்
வற்றல் மரமெனப் பற்றிலா வாழ்வினை
அளவிலா தெனக் களித்தாய்-நான்
அஞ்சி அஞ்சிமிக நெஞ்சம் உருகிட
உளன்என ஓடி வந்தாய்-என
உன்றன் பொருளாக்கி ஓங்கிடச் செய்திடும்
(உன்னை)

வஞ்சனை செய்தறியேன்-பிறர்
வாழ்விடைப் புக்குமே தாழ்வினைத் தங்திடேன்
அஞ்சி அறவழியே-என்றும்
அன்னை உன் அருள்நெறி இதுவென வாழ்ந்தனன்
மிஞ்சியான் சென்றதில்லை-இது
மேலான உன்னுளம் தானறி யாததோ
வஞ்சிக் கொடி அனையே-இன்று
வந்து எனக்கருள் செய்த நற்றெய்வமே
(உன்னை)

91

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கவிதை_உள்ளம்.pdf/93&oldid=1387675" இலிருந்து மீள்விக்கப்பட்டது