பக்கம்:கவிதை உள்ளம்.pdf/94

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கவிதை யுள்ளம்



தைத்திரு நாளதனில்-உன்றன்
தனயன் திருச்செந்தில் தலைவாயில் நின்றுமே
உத்தமி உளமுருகி-என்றன்
ஒருதலைவன் அவன் அன்னைய ருடன் அருள்
சத்திய் காட்சி கண்டேன்-அதன்
தனிப்பெரும் பயன்எனத் தளிர்ஒளி முகத்துடன்
புத்தொளி காட்டி வந்தாய்-உன்றன்
புண்ணிய அருளிலே என்னை மறந்தனன்
(உன்னை)
ஆண்டதன் முதல் நாளில்-எங்கோ
அப்பாலே சென்றிட்ட என்னை அருகிலே
வேண்டி அழைத் தெனக்கு-இரு
வித்தக அன்னையர் தம்முடன் நின்றெனை
ஆண்டருள் கோலத்தையே-அவன்
அள்ளிப் பருகென உள்ளத் தனித்தனன்
வேண்டிய பயனிதுவோ-இன்று
மேன்மைவழி அன்னாய் மிக்கிட வந்தனை
(உன்னை)
நாக ஒளி துலங்க-அன்று
நல்லருள் தானாகக் காட்டி வந்தாளினும்
சோக மனத்தவனாய்-ஏனோ
தொடர்ந்தோடிக் காணாது நின்றிட்ட என்னிடம்
வேகமாய் மீண்டுவந்து-உள்ள
வேதனை தீர்த்திட அருட்காட்சி நல்கிய
பாக மமர்ந்தவளே-எனைப்
பாரினில் நல்லொளி பற்றிடச் செய்தனை
(உன்னை)

92

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கவிதை_உள்ளம்.pdf/94&oldid=1387681" இலிருந்து மீள்விக்கப்பட்டது