பக்கம்:கவிதை உள்ளம்.pdf/95

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சமயம்


ஆடியின் முதல் நாளில்-நல்ல
அரும்வெள்ளி நாளினில் அகிலாண்ட ஈஸ்வரி
தேடிவந் தெனக் களித்தாய்-களி
தெள்ளு இசைத்தமிழ் வெள்ளத்திலே உயர்
பாடல் அருள் புரிந்தாய்-உளம்
பற்றி அதைஎனை உன்வழி யாக்கியே
கூடி மகிழ்ந்து நின்றேன்-இன்றுன்
குளிர் அருள் நெறியேனும் கூட்டிலே
மயங்கினேன் (உன்னை)

புத்தொளி பிறக்குதம்மா-உன்றன்
பொன்னொளி அணைப்பிலே புகுந்தஎன்
அகத்திலே
மெத்த நலம் அரும்பும்-இந்த
மேன்மைத் தமிழ்நலம் மிக்கெனக் காக்கிடும்
சித்தத் தெளிவடைந்தேன்-இனிச்
சிந்தையில் உனையன்றிச்சேர்த்திடேன் மற்றத்தை
நித்தம் உடனிருப்பாய்-என்றும்
நிலைபெறு வாழ்விலே நீள்புகழ் தர அருள்[1]
மயங்கினேன் (உன்னை)

———————————

93

  1. * வாழ்வில் பெற்றபல அனுபவங்களின் அடிப்படையில் எழுந்த
    பாடல்
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கவிதை_உள்ளம்.pdf/95&oldid=1387686" இலிருந்து மீள்விக்கப்பட்டது