பக்கம்:கவிதை உள்ளம்.pdf/96

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சைவ இளைஞர்களுக்கு வேண்டுகோள்


கற்பக மோங்கும் நற்புக ழுடைய
    கவிஞர்க ளெங்குமே பரவிப்
பொற்புடன் பொலியும் புண்ணிய நாட்டிற்
    புராந்தகர் பொற்பதம் போற்றும்
நற்குலத் துதித்து நன்னலம் பொலிந்து
    நாட்டினில் யாவரும் வியக்க
விற்பன ரெனவே விளங்கிடுஞ் சைவ
    வித்தக இளைஞரே கேளிர்!


நீரணி நிருத்தர் நின்மல வடிவை
    நித்தமும் கருத்திடை நினைத்தே
ஒரணி கலமாம் உண்மையைக் கொண்டு
    உழன்றிடும் மயக்கமே நீத்துப்
பாரணி சைவப் பற்றதைப் பரப்பிப்
    பன்னெடு நாட்களாய்ப் பயின்ற
பேரணி கலன்கள் பிள்ளையார் முதலாம்
    பிள்ளைக ளேயென அறிவீர்

புகலியிற் றேன்றிப் பொன்நகர்க் கூடல்
    புறச்சம யங்களைப் போக்கி
இகலில்சீர் பெற்று யாண்டுமே பயின்று
    இறையவன் பதமலர் ஏத்திப்
புகலிது வென்று புராங்தக ரடியைப்
    பூவுல கினிற்புலப் படுத்தித்
தகவுட னின்ற சத்திய புருடர்

    சம்பந்த ராமிலை யவரே

94

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கவிதை_உள்ளம்.pdf/96&oldid=1387697" இலிருந்து மீள்விக்கப்பட்டது