பக்கம்:கவிதை உள்ளம்.pdf/97

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சமயம்


வெண்ணெய் நல்லூரில் விளங்கிடு வேளாண்
    மேதகு குலத்தினில் தோன்றி
எண்ணலில் சைவம் இனிதுநின் றோங்க
    ஏற்றமாம் ஞானபோ தத்தைக்
கண்ணுத லருளால் காசினிக் குதவிக்
    கன்மமாம் புன்மல மவித்த
புண்ணிய முதல்வர் போற்றிடு மிளைய
    புதல்வரே யென்பதை யுணர்வீர்

சுந்தரர் முதலாம் சொல்லரு மிளைய
    தொண்டர்கள் தோன்றியே தூய
சந்திர னணிந்த சடைமுடிக் கடவுள்
    தனிப்பெருங் கருணையை நிறுவி
அந்தர முதலா மனத்துல கேத்தும்
    அண்ணாலா ரடிமல ரடைந்து
சந்ததம் கிலேத்துத் தனிப்புகழ் பெற்றார்
சாற்றிடின் அளவில ரம்மா!

ஆதலாற் சைவ இளைஞராய் இன்று
அவனியிற் றேன்றிய நீவிர்
மாதொரு பாகன் மலரடி போற்றும்
மாசிலா மதமதை நிறுவிக்
கோதிலா உண்மைக் குணங்குறி கடந்த
கொற்றவன் பதமல ரடைய
ஆதர வாகி அனைவருஞ் சேர்ந்து

ஆனந்தத் துடன்வரு வீரே.

———————

சீமுக ஆண்டு சித்திரைத் திங்கள் (1933 ஏப்ரல்) சித்தாந்த இதழில் வெளியானது

95

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கவிதை_உள்ளம்.pdf/97&oldid=1387706" இலிருந்து மீள்விக்கப்பட்டது