பக்கம்:கவிதை உள்ளம்.pdf/98

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

காதல்


தெய்வீகக் காதல்

தோட்டத்தில் மாலையி லோர்நாள்-நல்ல
சுந்தர வாலிபன் வந்து இருந்தான்
பாட்டுகள் பாடிய வாயால்-எந்தன்
பைங்கிளியே கண்ணே வாராயோ என்றான்

‘ஜில் ஜில் ஜில்’ என் றோசை தோன்ற-பசுந்,
திரையாம் செடியினைத் தாண்டியே நின்று
மெல்லிய கொடியினை ஒத்த-உயர்
மேலாம் அழகுடை மேனகை வந்தாள்

கண்டே கனிரச மென்றான்-எங்தன்
காதலரே உள்ளத் துள்ளவ ரென்றாள்
அண்டிடு வாய்அரு கென்றான்-நான்
ஆண்கள் அருகினில் அண்டிடேன் என்றாள்

ஏதுக்கிவ் வாதென் றிசைத்தான்- அவள்
எல்லா முன்காதலால் ஏற்பட்ட தென்றாள்
வாதுக்கு முன்னே நிற்கின்றாய்-அடி
வையகம் யாவும்உன் வாய்சொற் கெதிரோ!

என்றெழுந்தே கிட்டே சென்றான்-அவள்
எடடிஎட்டித் துாரே ஏகிட நின்றாள்
நன்றிதோ உந்தனுக் காமோ-அடி

நானே உன் சேமத்தை நாடித் திரிவேன்

96

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கவிதை_உள்ளம்.pdf/98&oldid=1387724" இலிருந்து மீள்விக்கப்பட்டது