பக்கம்:கவிதை உள்ளம்.pdf/99

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

காதல்


கூடி மகிழ்ந்திட லாமே-நம்மில்
கூடாதிந்தப் பெருங் கோடிப் பிணக்கும்
நாடி உனைப்பற்றி விட்டேன்-இனி
நானும் விடுவேனோ நங்கையே உன்னை

என்றே மலர்க்கரம் தொட்டான்-ஆ!
இன்பம் எல்லாம் ஒன்றாய் எய்தியதன்றோ
அன்பின் திருஉரு வானார்-அவர்
ஆனந்த நிலைதனை ஆர்சொல வல்லரர்

இன்பம் தரும் எந்தன் துரையே-நீ
என்னைவிட் டென்றுமே ஏகா திருந்து
உண்மை நலமருள் புரிவாய்-இனி
உலகினில் உனையன்றி உயர் வெனக் குண்டோ!

காதல! வாழ்குவம் ஒன்றாய்-எனக்
கன்னி இசைத்து மகிழ்ந்திட நின்றாள்
மாதுனை என்றும் பிரியேன்-இந்த
மண்ணிலும் விண்ணிலும் கண்ணிலும் என்றான்

உள்ளத் துவகையைக் கொண்டாள்-கை
உயர்த்தி அவன்உரு ஓங்கி அளந்தாள்
வெள்ளத்தனை இன்பம் உற்றாள்-உயர்
வேகமாம் காதல் விளக்கிடப் போமோ!

கண்ணே மணம்செய்து வாழ்வோம்-உடன்
காணரு மின்பத்தில் நாமும் இருப்போம்
பண்ணும் இசைமொழி யும்போல்-மற்றும்

பாலும் அதிலுள்ள வெண்மையும் போல

97

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கவிதை_உள்ளம்.pdf/99&oldid=1387733" இலிருந்து மீள்விக்கப்பட்டது