பக்கம்:கவிதை ஒரு கலந்துரையாடல்.pdf/11

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கவிதை-ஒரு கலந்துரையாடல் பாலா: தமிழ் மாதிரி இரண்டாயிரம் வருஷத்துப் பாரம்பரியம் உள்ள ஒரு மொழியிலே கவிதை எழுதுவது எப்படி என்பதை சொல்லிக் கொடுப்பதற்கான தேவை என்ன? இரண்டாவது, கவிதை எழுதறது எப்படிங்கறதைச்சொல்லிக் கொடுக்க முடியுமா? சாம்பார்வைக்கிறது எப்படிங்கறது மாதிரி, கவிதை எழுதறது எப்படி? என்று சொல்லிக் கொடுத்து, ஒரு ஆளைப் பெரிய கவிஞனாக்கி விட முடியுமா? திடீர்னு ஒரு பெண்ணை அறிமுகப்படுத்தி கதாநாயகி யாக்கிட்டேன்... நடிகையாக்கிட்டேன்னு சொல்ற மாதிரி, ஒருத்தரைக் கவிஞனாக்கிட்டேன்னு யாராவது சொல்ல முடியுமா?... ஒரு கவிஞனை உருவாக்கிவிட முடியுமா? - கவிஞன் பிறக்கிறான் என்று சொல்கிறார்கள். கவிஞன் உருவாகிறான் என்றும் சொல்கிறார்கள். நீங்க என்ன நினைக்கிறீங்க? மீரா: கவிஞன் ஒருவன் பிறக்கிறான் என்பதை இன்னைக்கு ஒத்துக்க முடியாது. அவன் உருவாக்கப் படுகிறான். சமுதாயத்தில அவனும் ஓர் அங்கம். அவனும் மற்ற மனிதர்களைப் போலவே உழைக்கிறான்... பாடுபடுகிறான். ஆனால்