பக்கம்:கவிதை ஒரு கலந்துரையாடல்.pdf/13

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சமூக அங்கீகாரம் என்பது ஒரு கவிஞனைப் பொறுத்த வரைக்கும் அவன் எழுதக் கூடிய புத்தகம், அவன் எழுதுகிற கவிதைகள் மேடைகளில், பத்திரிகைகளில் அரங்கேறுவது என்று இவற்றைப் பொறுத்துத்தான் அமைகிறது. ஏதோ நாமும் ஒரு கவிஞன் என்று சமூகத்தால் அங்கீகரிக்கப் பட்டிருக்கிறோம். நாலு பேர் பாராட்டு கிறார்கள்... நமது கவிதைகள் போய்ச் சேரவேண்டிய இடத்துக்குப் போய்ச் சேருது... என்று ஒரு திருப்தி ஏற்படும்போது 'நாம் கவிஞனாகி விட்டோம் என்ற உணர்வு மனதுக்குள் ஏற்படுகிறது. நான் பி. ஏ. படித்தபோதே கவிதைகள் எழுதியிருக்கேன். 1961-ல் மதுரை தியாகராசர் கல்லூரியில் எம்.ஏ. படித்தபோது எனக்கு இதற்கான சூழல் உருவானது. நான், கவிஞர் அப்துல் ரகுமான், தியாகராசர்கல்லூரியிலிருந்து சக மாணவக்கவிஞர்கள் இப்படிப்பட்ட சூழ்நிலையில் பழகி வந்ததும் இதற்கான சூழல்களில் ஒன்று. அந்த நேரத்தில் நான் எழுதிய சில கவிதைகள் பத்திரிகைகள்லே வெளியாகியிருக்கு. அப்போது நான் தி.மு.க.வில் தீவிரமாக ஈடுபாடும் ஆர்வமும் கொண்டி ருந்தேன். அதனால் அந்த இயக்கத்துக்குரிய சில கவிதைகளை சில பத்திரிகைகள் வெளியிட்டன. இப்படியெல்லாம் வெளிவருகிற போதுதான் நாமும் ஒரு கவிஞனாக அங்கீகரிக்கப்பட்டிருக்கிறோம்... பலபேர். அண்ணா போன்ற அரசியல் தலைவர்கள் கூட நான் எழுதிய II