பக்கம்:கவிதை ஒரு கலந்துரையாடல்.pdf/16

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மிகப் பெரிய புலவர்கள் இருந்திருக்கிறதால் இலக்கியம் மேலும் செழுமையடைவதற்கு வசதியாக இருக்கிறது. - மரபு நமக்கு ஒரு தடை என்று சொல்ல முடியாது. நமது முன்னோர்கள் எல்லாம் பல்வேறு விதமான இலக்கியப் பரிமாணங்களை, சோதனைகளைக் கவிதையில் நிகழ்த்திக் காட்டியிருக்கிறார்கள். நாம் இன்னும் வேகமாக, உயரமாகச்செல்வதற்கு இவை ஒரு வாய்ப்பாகத்தான் கருதப்பட வேண்டுமே தவிர சுமை என்றோ தடை என்றோ கருதிவிட முடியாது. ஆனால் இன்றைக்கு என்ன நினைக்கிறார்கள் என்றால் ஒரு புது சிந்தனை இருக்கவேண்டும், ஒரு புதிய பார்வை இருக்க வேண்டும் என்றால் நம் மரபே நமக்கு அதிகமானதடையாக இருக்கிறது. ஒரேமாதிரி பழைய வடிவத்தையே, பழைய சொற்களையே வைத்துக் கொண்டிருக்கிறோம். புதுமையாகப் போக முடிய வில்லை. மேலை நாட்டு இலக்கியங்களை அதிகமாகப் படிக்க வேண்டும், நம் தமிழ் இலக்கியங்களைக் காட்டிலும் அதிகமாக.... என்றெல்லாம் நினைக்கிறார்கள். புதுமையை நாம் வரவேற்கத்தான் செய்கிறோம். அதே நேரத்திலே ஒவ்வொரு கால கட்டத்திலேயும் என்னென்ன சாதனைகள் நிகழ்த்தப்பட்டிருக்கின்றன என்பதைப் புரிந்து கொண்டு இந்த நூற்றாண்டுக்குத் தகுந்த மாதிரி அதைப் பயன்படுத்தலாம். இளங்கோவடிகள் ஒரு காப்பியத்தைப் படைத்ததற்கும் கம்பன் பின்னாளில் ஒரு காப்பியம் படைத்ததற்கும் 14