பக்கம்:கவிதை ஒரு கலந்துரையாடல்.pdf/17

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ரொம்பவும் வேறுபாடு உண்டு. இளங்கோவடிகளது காப்பியத்திலிருக்கக் கூடிய ஒரு இறுக்கம் ஒரு செறிவு, அவருடைய காலத்திற்குத் தகுந்த மாதிரியான ஒரு கம்பீரமான நடை, கம்பன் காலத்தில் இன்னும் கொஞ்சம் நெகிழ்ந்து கொடுத்தது, கவிதைத் தன்மை அதிகமாகியது. பாத்திரங்களை அமைக்கும் தன்மையின்போக்கு இவற்றிலும் கம்பன் வேறுபட்டு நிற்கிறான். காப்பியம் என்பது ஒரு வடிவம் என்றால் ஒவ்வொருவரும் அவரவர்களது காலத்துக்கும் சூழலுக்கும் ஏற்ப, மேலும் மேலும் சிறப்பாகப் படைத்துவிட்டுப் போக முடிகிறது. - அதே மாதிரி ஒரு கவிஞன், தனக்கு முன்னோடி இலக்கியங்களையெல்லாம்ஜீரணித்துக் கொண்டுதான் வாழ்கிற காலச் சூழலுக்கேற்ப மேலும் மேலும் மெருகூட்டிப் படைக்க வேண்டும் என்று நினைக்கிறான். நமது முன்னோர் எந்த இடத்தில் விட்டிருக்கிறார்கள் என்பதை அறிந்து விட்ட இடத்திலிருந்து தொடர்ந்து கொள்கிறான். உதாரணமாக பாரதியார் அதிகமாகத் தேசிய உணர்ச்சியை மையமாக வைத்துக்கவிதை படைத்தார். தேசிய உணர்ச்சியிலும் அவர் முக்கியமாக எடுத்துக் கொண்டது சுதந்திரம். அன்றைய பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்திலிருந்து நம் நாட்டை விடுவித்துச் சுதந்திரம் பெறவேண்டும் என்ற நோக்கம் இருந்தது. ஆனால் இங்கேயே நமது நாட்டிலிருந்த மன்னர்கள், பிரபுக்கள், ஜமீன்தாரர்கள் போன்றவர்களிடமிருந்து நமது மக்கள் சுதந்திரம் பெறவேண்டும் என்பதைப் I5