பக்கம்:கவிதை ஒரு கலந்துரையாடல்.pdf/20

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இதையெல்லாம் நாம் எடுத்துச் சொல்லலாம். இதையெல்லாம் பார்த்து, தான் எப்படி இவர்களிட மிருந்து வேறுபட்டுப் புதிதாகச் செய்யலாம் என்று கவிஞனுக்குத் தோன்றவேண்டும். அவர்களது பார்வை யிலிருந்து தன்னுடைய பார்வையை எப்படித் தனித் தன்மையோடு நிறுவிக் காட்டலாம் என்று நினைக்கவேண்டும். அப்போதுதான் அவனது உள்ளத்திலிருக்கும் கவித்தன்மையும் சேர்த்து அகலிகை புதிய உருவம் பெறக் கூடும். இதுதான் அவன் கற்றுக் கொள்ளக்கூடிய முறை. இதுதான்Creation, படைப்பு. பழைய இலக்கியங்களை அஸ்திவாரமாக வைத்துத் தான் இதைக் கற்றுக் கொள்ளமுடியும். Lunam. Great Masters - களிடமிருந்து கற்றுக் கொள்கிறோம் என்பது ஒருவகையில் சரிதான். ஆனால் Great Masters -களைப் பார்த்து மலைத்து நின்று விடுவதும் இருக்கிறதல்லவா? கம்பராமாயணத்தைப் பார்த்துட்டு இந்தக் காலத்தில இது மாதிரி யெல்லாம் யார் காவியம் படைக்கப் போறாங்க.. ? புதுக் கவிதையெல்லாம் என்ன? என்று நினைக்கவும் கூடுமே... - மீரா: இருக்கலாம். அது ஒரு மாதிரியான தாழ்வு மனப்பான்மை யாகத்தான் இருக்க முடியும். பாலா. சிலப்பதிகாரம் மாதிரிகாவியம் படைச்சுட - முடியுமா... கம்பராமாயணம் மாதிரி எழுதிட முடியுமா இன்றைக்கு எழுதறதெல்லாம் வியர்த்தம்' என்று ஒரு இளங்கவிஞன் நினைத்துவிட்டால் அதுவே l&