பக்கம்:கவிதை ஒரு கலந்துரையாடல்.pdf/24

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இடத்தில் சேர்த்தான். மீற வேண்டிய இடத்தில் மீறினான். பாரதி இலக்கணத்தை அப்படியே தவறாமல் பயன்படுத்தியிருந்தால் அவன் செய்யுள்கள் எழுதிக் கொண்டுதானிருந்திருப்பான். கவிஞனாகி யிருக்க முடியாது. பாலா:வெண்பாவுக்கு-புகழேந்தி,விருத்தத்துக்குக் கம்பன் என்றெல்லாம் சொல்கிறார்களே, இப்படிக் குறிப்பிட்ட ஒரு யாப்பில் Specialize செய்து அவர்கள் பெயர் வாங்கியிருக் கிறார்கள். இவர்களது பெருமைக்கு இந்த யாப்பு காரணமா? இல்லை இந்த யாப்பையும் மீறி அவர்களுக்குக் கவிதை வந்திருக்கிறதா? மீரா: அந்தக் காலகட்டத்தில் இலக்கிய வகையே யாப்புக்குள்தான் அடங்கிக்கிடந்திருக்கிறது. வெண்பா பாடக்கூடியவர் விருத்தம் பாடக்கூடியவர் என்றுதான் பார்க்கப்பட்டதே தவிர, இன்றைக்குப் பார்க்கிற மாதிரியான விரிவான சூழல் அன்றைக்கு இல்லை. உரைநடை என்பது இன்றைக்கு ஒரு பெரிய வரப்பிரசாதம். இருபதாம் நூற்றாண்டில் வசன இலக்கியம் என்பது செல்வாக்குப் பெற்றுவிட்டது. அப்போதெல்லாம் ஜோஸ்யமாக இருந்தாலும், மருத்துவமாக இருந்தாலும், கணிதமாக இருந்தாலும் எல்லாமே செய்யுள் வடிவத்திலேயே உருவாக்கப் பட்டன. இலக்கண நூல்கள் கூட உரைநடையில் சொல்லப்படாமல் செய்யுள் வடிவிலேயே செய்யப்பட்டன. -