பக்கம்:கவிதை ஒரு கலந்துரையாடல்.pdf/27

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மீரா: இருக்க வேண்டும் என்று கட்டாயப் படுத்தவில்லை. வெண்பா செப்பலோசையில் இருக்கும் என்றுதான்சொல்கிறார்கள். அகவல் என்பது ஒர் ஆசிரியன் மாணவனுக்குச் சொல்வது மாதிரியான ஓசையை உடையது. அகவல் என்பது எளிமையான பாவகை. புதுக் கவிதையோடு மிக நெருக்கமாக இருக்கக்கூடிய பாவகை. சேக்ஸ்பியர் ஆங்கிலத்தில் எழுதியுள்ள Blank Verseஐக்கூட நமது அகவல் பாவோடு ஒப்பிட்டுச் சொல்ல முடியும்... அகவல் பாவில் எல்லாமே எதுகை மோனையோடு இருக்க வேண்டும் என்கிற கட்டாயம் கிடையாது. மோனை இருந்தால் காதுக்குக் கொஞ்சம் நன்றாக இருக்கும் அவ்வளவுதான். பாலா: கவிதைக்கும் இசைக்கும் ஒரு தொடர்பு இருக்கிறது. கவிதை இசையாக மாற வேண்டும். இலக்கணம் என்பது இசைத் தன்மையைக் கொடுப்ப தற்காகப் பயன்பட்டதா? மீரா: இலக்கணம் என்பது கவிதைக்குரிய கூடுதல் அலங்காரம் மாதிரிதான் இருந்தது. நகையோ, அல்லது அணிமணிகளோ எப்போது போட்டுக் கொள்கிறோம் என்பதைப் பொறுத்தே அதன் முக்கியத்துவம் அமைகிறது. கடிகாரம் கட்டுகிறோம் என்றால் அலங்காரத்தோடு பயனும் கிடைக்கிறது. ஆனால் இந்த அலங்காரங்களே ஒரு சுமையாக மாறிப்போனால்...? கை முழுக்க ஒரே ஒரு கடிகாரத்தையே கட்டிக் கொள்ள முடியுமா? பாரதிதாசன் ஆபரணம் தீராத ரணம்னு' 25