பக்கம்:கவிதை ஒரு கலந்துரையாடல்.pdf/31

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மாறுபட்டிருக்கிறது. அந்தக் காலப் புலவன் காதல் உணர்ச்சிக்கு ஆட்பட்டு மனவேதனைப்பட்டுப்பாடும் போது 'பாறையில் மோதுகிற கடல்நீர்த்துளி எப்படி ஒன்று மில்லாமல் சிதறிப்போகிறதோ, அதுமாதிரி நானும் உன்னால் பாதிக்கப்பட்டு உருக்குலைந்து போனேன்...' என்று பாடினான். ஆனால் இன்றைக்கு உள்ள கவிஞன் எப்படிப் பாடுகிறான் என்றால் 'காரம் போர்டில் அலைக் கழிக்கப்பட்ட சிவப்புக் காயாய்...' என்று பாடுகிறான். பாலா: ஆமாம். இன்றைக்குப் பார்வை மாறியி ருக்கிறது. நவீனமாகியிருக்கிறது. 'எனக்கும் கொஞ்சம் நிலமுண்டு. ஸ்டேஷன் மாஸ்டர் கொடி போல...' என்று எழுதுகிறபோது அவனது பார்வையும் உவமையும் புதிய கோணத்தில் மாறியிருப்பது தெரிகிறது. மீரா பாருங்கள். இது நவீனமாக இருக்கிறது. நமது வாழ்க்கையோடு சம்பந்தப்பட்டிருக்கும் ஒர் உதாரணத்தைத் தரும்போது கவிதைக்கு அது பொருத்தமானதாகவும் சிறப்பாகவும் இருக்கிறது என்று நாம் நினைக்கிறோம். பாலா: கவிதைக்கு அணி இலக்கணம் என்று வகுத்து வைத்திருக்கிறோம். இந்த அணி இலக்கணம் காலத்திற்குக் காலம் மாறக்கூடியதாகத் தானே இருக்க முடியும்? 39