பக்கம்:கவிதை ஒரு கலந்துரையாடல்.pdf/32

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மீரா: நிச்சயமா. இன்றைக்கு இல்லாத உவமைகளாக காமதேனு, கற்பகவிருட்சம் என்றெல்லாம் சொல்லிக் கொண்டிருந்தால் எப்படி, ஏதோ பழைய இலக்கியங்களில் உள்ள இவற்றைத் திரும்பத்திரும்பச் சொல்லிக் கொண்டிருக்க வேண்டிய அவசியமில்லை. எடுத்ததற்கெல்லாம் பழைய உவமைகளையும் பழைய சிந்தனைகளையுமே சொல்லிக் கொண்டிருப்பதைவிட புதிதாக, புத்துணர்ச்சியோடு, வாழ்க்கையில் பார்க்கக்கூடிய யதார்த்தங்களைச்சொன்னால் அதுதான் பொருத்தமாக இருக்கும். சங்க இலக்கியத்தில் சொல்லக் கூடியதை இன்றைக்குப் புதிதாக மாற்றிச் சொல்ல முடியுமா என்று யோசிக்க வேண்டும். பாரதியைப் பற்றி நா.காமராசன் பாடிய கவிதை ரொம்பவும் சிறப்பான கவிதை. ‘பாரதி ரொம்பவும் நைந்துபோன உடை உடுத்தியிருந்தான். ஆனால் அவனது மீசை மட்டும் கம்பீரமாக இருந்தது' என்ற பொருள்தரும் கவிதை அது... - 'தன்னுடைய உடையைப்போல் நைந்துபோன தாய்நாட்டைநினைத்திட்டான்... இந்த நாடு என்னுடைய மீசையைப்போல என்றைக்குநிமிருவது என்று சிந்தித்தான் ...' என்ற கவிதை. இப்படி உவமைகளைக் கூடபாரதியின் உடையிலும் மீசையிலும் எடுத்துக் கொண்டது சிறப்பாக இருக்கிறது. அதைவிட்டுவிட்டு. 30