பக்கம்:கவிதை ஒரு கலந்துரையாடல்.pdf/38

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கேலி செய்வதற்காகச் சொல்லப்பட்ட கவிதைதான் இது. இந்தக் கவிதையில் என்ன கருத்து இருக்கிறது... என்ன கற்பனை இருக்கிறது. கவித்துவம் இருக்கிறது...? ஆனால் இலக்கணப்படி சரியாக அமைந்திருக்கிறதே.. இலக்கணப்படி அமைந்துவிட்ட இது கவிதையா? மேடைகளில் பாடக்கூடிய பாடல்கள், அரசியல் கட்சிகளின் பிரசாரப் பாடல்கள் இவற்றையெல்லாம் மோனையோடும் சத்தத்தோடும் பாடினால் தான் எடுபடுகிறது. அப்போதுதான் அது கேட்பவர்களின் மனசுக்குள் புகுந்து தங்குகிறது. இசைப் பாடல்களுக்குச் சந்தம்தான் அவசியம். பாரதியின் பாடல்கள் சுதந்திரப் போராட்ட காலத்தில் காட்டுத் தீயாய்ப் பரவியதற்குக் காரணம் எல்லோரும் திரும்பத் திரும்பப் பாடும்போது அந்தப் பாடல்களில் சந்தமும் ஓசையும் இருந்ததுதான். இன்றைக்குப் புதுக்கவிதைகள் இருக்கின்றன. இவற்றைப் படிக்கும்போது மனசுக்குள் நிச்சயமாக நல்ல கவிதைகள் படியத்தான் செய்யும். ஆனால் மக்களிடம் இன்னும் பரவலவாகப் போகவேண்டும் என்றால் இசையோ, சந்தத்தையோ நாம் முழுக்கத் துறந்து விட்டுப் போக முடியாது. இவற்றையும் நாம் மனதில் கொள்ள வேண்டும். இன்றைக்குப் புதுக்கவிதை எழுதுகிறவர்களும் சினிமாவுக்குப் பாட்டெழுதப் போகிறார்கள். L!!ገfጬ) {F: சினிமாவுக்கு இவர்கள் கவிதை ழுதறதுக்காகப் போகவில்லையே... கவிதைக்கான இடமே அங்கே கிடையாது. 'கவிதை இசையின் 26