பக்கம்:கவிதை ஒரு கலந்துரையாடல்.pdf/39

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இடத்தைப் பிடிக்கவேண்டும். உயர்வான ஒரு காரியம் தான். 'ஒரு வார்த்தை தன்னை ஒரு ஓவியம் மாதிரி வெளிப்படுத்திக் கொள்ள வேண்டும்...! என்று ஒரு மேற்குநாட்டுக் கவிஞன் சொல்கிறான். நம்முடைய பாரம்பரியம் என்னவென்றால் கவிதை என்பது ஒர் இசை மாதிரி விரிவடைய வேண்டும்... என்பது. இப்போது சினிமாவுக்குப் பாட்டெழுதுபவர்கள் இசைக்காகபாட்டெழுதிக்கொண்டிருக்கிறார்கள். இது ஒரு வகையான 'இசைபட வாழ்தல். மீரா. நீங்கள் இதைச் சொன்னீர்கள் என்றால் இசை என்கிற 'மீட்டருக்குள் நாங்கள் எழுதுகிறோம் என்பார்கள். ஒன்றுமேயில்லாத வெறும் வார்த்தைகளைப் போட்டு நிரப்பி விட்டால் நல்ல இசையமைப்பாளர் இனிமையான நல்ல இசை அமைத்துவிட்டால் நானும் கவிதை எழுதிவிட்டேன்’ என்று பூரித்துப் போகிறார்கள். X பாலா: இசைக்கு வார்த்தைகளை Fill-Up' பண்ணுகிறார்கள். தமிழ் நாட்டிலேயே இப்போது பெரிய ஆபத்து என்னவென்றால் சினிமாவுக்கு யார் பாட்டெழுது கிறாரோ, அவர்கள்தான் மிகப் பெரிய கவிஞர் என்ற கருத்து பாமர ஜனங்கள் மத்தியிலே இருக்கிறது. பாரதியாரே, இன்றைக்கு இருந்திருந்தால் அவரைக்கவிஞராக ஏற்றுக்கொள்ளாமல் இன்றைக்குச் சினிமாவில் யார் அதிகமாகப் பாட்டெழுதுகிறாரோ அவரையே மகாகவி என்று ஏற்றுக் கொண்டிருப்பார்கள். 37