பக்கம்:கவிதை ஒரு கலந்துரையாடல்.pdf/40

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொதுமக்களைச் சென்றடைவது தான் கவிதை என்று நாம் பட்டியல் போட்டோமென்றால் பல நல்ல கவிதைகளுக்கு நிச்சயமாக மதிப்பிருக்காது. வெகுஜன ரசனை என்பதும் உயர்வானகவிதை என்பதும் ரொம்ப சீக்கிரம் பொருந்தி வராது. அப்படிப் பார்க்கிறபோது சினிமாவுக்குப் பாட்டெழுதுகிறவர்கள் இசைக்கு கவிதையைச் சேவை செய்ய அனுமதித்து விடுகிறார்கள். அல்லது ரகுமான் சொல்வது மாதிரி அங்கே சிற்பிகள் அம்மி கெர்த்துகிற வேலையைச் செய்து கொண்டிருக்கிறார்கள். இரா.வே. இதிலிருந்து என்ன தெரிகிறதென்றால் கவிதை மக்களைச் சென்றடைவதை விட இசை மிக வேகமாகப் பாமர ஜனங்களிடம் சென்றடைந்து விடுகிறது. பாலா. நிச்சயமாக. இசைக்கு அந்த வீச்சு அதிக மாகவே இருக்கிறது. - இரா.வே. இசைப் பாடல்கள் என்றால் மரபு ரீதியாக வரவேண்டியிருக்கிறது. பாலா. இசை First Stage -ல் தான் இம்ப்ரெஸ் பண்ணும். Visual effect-ல் கவிதை அமைந்தால் அது எல்லா கட்டங்களிலும் இம்ப்ரெஸ் செய்து கொண்டேயிருக்கும். மீரா: ஆமாம். ரொம்ப நாளைக்கு நிற்கிற விஷயமாக இப்படிப்பட்ட கவிதைகள்தான் இருக்க 38