பக்கம்:கவிதை ஒரு கலந்துரையாடல்.pdf/42

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இருந்தால்தான் அது நல்ல கவிதையாக முடியும், முதலில் ஒரு வாசக ஈர்ப்புத் தன்மை வேண்டும். அப்புறம் நமது வெளியீட்டு முறையில் உவமை உருவகம் அணி இவையெல்லாம் இணைந்த கவித்துவம். கி.ராஜநாராயணன் தான் பள்ளிக்கூடமே போகாதவர் என்று சொல்வதற்காக நான் மழைக்குத் கூடப் பள்ளிக்கூடத்தில் ஒதுங்கினதில்லை. என்று சொல்வார். இம்மாதிரி மழைக்குக் கூட . பள்ளிக்கூடத்தில் ஒதுங்கினதில்லை என்று மட்டும் சொல்லி நிறுத்தியிருந்தால் இது வெறும் ஸ்டேட்மெண்ட் ஆகத்தானிருந்திருக்கும். ஆனால் அவர் அதற்கு மேலும் சென்று 'அப்படி ஒதுங்கின போதும்கூட நான் பள்ளிக் கூடத்துக்குள்ளிருந்து மழையைத்தான் வேடிக்கை பார்த்தேனே தவிர பள்ளிக்கூடத்தை வேடிக்கை பார்க்கவில்லை...' என்று சொல்கிறபோது அவர் பள்ளியில் படிக்கவில்லை என்கிற விஷயத்தையும் சொல்லிவிடுகிறார்... தான் ஒரு கலைஞன் என்பதையும் காட்டிக் கொள்கிறார். இது வெறும் Prose தான். ஆனாலும் இதில் இழையோடுவது கவித்துவம் அல்லவா? ஒரு கருத்து LDLG)lb 5gSla^5uuItS GilLTSJ. Poetryisnota Statement. கவித்துவம் என்கிற அம்சத்தைக் கற்றுக் கொள்வதற்கு மரபை அவசியம் படிக்க வேண்டும். - மீரா: எனக்கும் நீங்கள் கூறுகிற இவ்வனுபவம் உதவி செய்திருக்கிறது. திருக்குறளில், இருநோக்கு இவளுண்கண் உள்ளது ஒரு நோக்குநோய் நோக்கொன்றந்நோய் மருந்து இரண்டு பார்வை 40