பக்கம்:கவிதை ஒரு கலந்துரையாடல்.pdf/43

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அவளிடத்தில். ஒரு பார்வை நோயை உண்டாக்குகிறது. இன்னொரு பார்வை அந்த நோய்க்கு மருந்தாக அமைந்தும் விடுகிறது. இதையே ஒரு புதுமாதிரியாகச் சொல்லவேண்டும் என்று எனது அனுபவம் சொன்னது. நீ முதல் முறை தலைசாய்த்து என்னைக் கடைக்கண்ணால் பார்த்தபொழுது என் உள்ளத்தில் முள் பாய்ந்தது. அதை இன்னும் எடுக்கவில்லை. முள்ளைமுள்ளால்தானே எடுக்க வேண்டும். எங்கே... இன்னொரு முறை பார்...! r என்று பழைய விஷயத்தை புது மாதிரியாகக் கூறியிருக்கிறேன். முள்ளை முள்ளால்தானே எடுக்க வேண்டும் என்பது பழமொழி. அந்த பழமொழியிலே எனக்கொரு ஈடுபாடு இருந்தது. திருவள்ளுவர் அன்று குறளில் எழுதி வைத்திருந்த நயமும் என் மனதில் பதிந்திருந்தது. ஆக ஒரு புது வடிவத்தை என் கவிதையில் என்னால் கொடுக்க முடிந்தது. பாலா. திருக்குறள் கருத்துக்கும் மீறி வேறொரு கருத்தை நீங்கள் சொல்கிறீர்கள். சொல்கிறபோது திருக்குறளும் இந்தப் பழமொழியும் உங்களுக்குப் பயன்படுகிறது. இதே மாதிரி தானே வேலுசாமியும் பாரதியின் influence' -லிருந்து ஒரு ஸ்டேஜ் மேலே போனார்... 'மாதர் தம்மை இழிவு செய்யும் மடமையைக்கொளுத்துவோம்.' 4?