பக்கம்:கவிதை ஒரு கலந்துரையாடல்.pdf/44

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

என்று அன்றைய கால கட்டத்தில் பாரதி பாடினான். அதையே இவர் கொஞ்சம் தற்கால சூழலுக்கேற்றபடி மாற்றிக்கொண்டு "மாதர் தம்மை இழிவு செய்யும் மடமையை மட்டுமல்ல.வா. மடையர்களையும் கொளுத்துவோம்.' என்று கூறியதில் பழைய மரபிலிருந்து அடிபிறழாம லிருந்தாலும் புதியதொரு புரட்சிக்காரனின் உத்வேகமும் தெரிகிறதே.. மீரா: திருவள்ளுவரும் பாரதியும் அன்றைக்குச் சொன்ன முறை வேறு. இன்றைக்கு வளர்ச்சியடைந்த சூழலில் நானும் வேலுசாமியும் சொல்கிற முறை வேறு. சொல்கிற முறைதான்... - பாலா. இதேமாதிரி, அப்துல்ரகுமானின் உன் கண்கள் கொசு வலையா மீன் வலையா... என்ற கவிதை கூட இருநோக்கு இவளுண்கண் உளது என்பதிலிருந்துதானே. கொசுவலை என்பது எதையும் உள்ளேவிடாது. மீன்வலை என்பது வெளியே விடாது. ஒரு காதலன் ஒரு காதலியின் வசப்பட்டு விட்டான். அவளிடமிருந்து அவனால் மீறவும் இயல்வில்லை.. உள்ளேதான் நிறைந்திருக்கிறதாகவும் இவனால் நம்ப முடியவில்லை. ஆக குறளிலுள்ள அந்தப் பழைய