பக்கம்:கவிதை ஒரு கலந்துரையாடல்.pdf/49

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மாதிரிதான். வழிகாட்டி விட்டுவிடும். கவிதை என்பது எதையாவது தெரிவிக்க முயலும். என்றும்தன் தகுதிக்கு மீறி எதையும் தெரிவிக்காது என்றும் எஸ்ரா பவுண்ட் கூறுகிறான். ஒரு விஷயத்தை வெளிப்படையாகச் சொல்வதைவிட சில நேரம் முயற்சி செய்து அதை அறிந்து கொள்கிற சந்தோஷத்தை வாசகனுக்கு அளிக்க வேண்டும். உதாரணமா விடுகதை இருக்கிறது. விடுகதை உங்களுக்கும் தெரியும் எனக்கும் தெரியும். நான் விடுகதையைப் போடுகிறேன். ஒரு குழந்தையிடம் இந்த விடுகதையைப் போடுகிற போது அதற்கான விடையை அது சொல்லி விடுகிறது. சொல்லிவிட்ட பிற்பாடு அதற்கு ஒரு சந்தோஷம். விடை தெரிந்த சந்தோஷத்தோடு தானே கண்டுபிடித்துவிட்ட சந்தோஷமும் சேர்ந்து கொள்கிறது. அதே மாதிரி ஒரு கவிதையின் பொருளை கவிஞனுடைய வழியிலேயே போய் கண்டறிவதில் மகிழ்ச்சி ஏற்படுகிறது. கவிஞனுடைய வழியிலேயே சென்று அவனைக் கண்டறிந்து கை குலுக்கிய சந்தோஷம் அது. அதனாலதான் வெளிப்படையாகச் சொல்வதைவிட குறிப்பு மொழிக்கு மதிப்பும் பலமும் அதிகம், அதனால் ஒரு விஷயத்தைச் சொல்கிறபோது அதை எவ்வளவு வலுவாகச்சொல்கிறோம் என்பதைக் கற்றுக்கொள்ள வேண்டும். இதுதான் கவித்துவம், டெக்னிக், வடிவம், உத்தி, QolşäSamib Additional Factors. கொடுக்கிற விஷயத்தை மனசில போய் வைத்துவிட்டு வருகிற மாதிரி. மற்றவங்க வாங்சி 47