பக்கம்:கவிதை ஒரு கலந்துரையாடல்.pdf/50

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கொள்வதைவிட, நாமே கொண்டு போய் அவர்கள் மனதில் வைத்துவிட்டு வருகிற மாதிரி - கவித்துவம் அதைச்சாதித்துக்காட்டிவிடும். வெறும் கவித்துவம் மட்டும் இருந்தால் கவிதை கிடைத்து விடுமா? சில பேர்களிடம் நல்ல வெளியீட்டு முறை இருக்கிறது. ஆனால் பெரிய கவிஞர்களுக்குள்ள அந்தஸ்து அவர்களுக்குக் கிடைக்கவில்லை. கவிஞர் சுரதாவை எடுத்துக் கொண்டோமானால் அவரிடம் எக்ஸ்பிரஷன் இருக்கிறது. சொல்கிற விஷயத்தை மிக அருமையாகச் சொல்கிறார். உவமை என்பது இலகுவாகவும், எளிமையாகவும் அவருக்கு வருகிறது. ஆனால் தமிழ்நாட்டின் மகாகவி என்கிற பெயரை அவரால் வாங்க முடியவில்லை. இதற்கு என்ன காரணம்? - ஒரு கவிஞன் என்று ஸ்தாபித்துக் கொள்கிறதன் மூலமாக ஜெயிக்க முடியாது. மக்களிடம் ஏதாவது ஒரு கருத்தை, ஒரு செய்தியை அவன் முன் வைத்தாக வேண்டும். ஜனங்களுக்கு வழங்குவதற்கென்று ஒரு கருத்து இருக்க வேண்டும். ஒரு செய்தி இருக்கவேண்டும். அது தன்னைப் பற்றியதாக இருக்கலாம். அல்லது சமுதாயத்தைப் பற்றியதாகவும் இருக்கலாம். வாழ்க்கையைப் பற்றிய பொதுவான நோக்காகவும் இருக்கலாம். அடுத்தவர்கள் பகிர்ந்து கொள்கிற போது மகிழ்ச்சியடையக் கூடிய, கிளர்ச்சியடையக்கூடிய அல்லது உத்வேகம் பெறக்கூடிய விஷயத்தைச் சொல்வதாக இருக்க வேண்டும். அதைத்தான் உள்ளடக்கம் கருத்து 48