பக்கம்:கவிதை ஒரு கலந்துரையாடல்.pdf/59

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெருகிப் போயிருக்கின்றன. பையில் கையில் சட்டையில் என்று குண்டுசிகள். காடும் வனாந்தரமும் இருக்கிற இடங்களில்தான்முள்தைக்கும். இன்றைக்கு நகர நாகரிக அம்சம் பெருகிவிட்டது. காலில் தைத்தால் கூட அது குண்டுசியாகத்தானிருக்கிறது. அதைப்போய் முள் என்றால் எப்படி? Liman: Modernity in expression and Modernity in Content QJor(\lb Qongorougjørgå Modern Poetry என்று சொல்லலாம். - lbum: Modernity in Content - Gigiriy Gorgoolgjib சரிதான். சிற்பிசகுந்தலை கதையை வைத்துக்கொண்டு எழுதியிருக்கிறார். சகுந்தலை கடிதம் எழுதுகிற கவிதை. 'எங்கள் சகுந்தலைகள் தொலைப்பது மோதிரங்களை யல்ல பொருந்தாத காதலரை..!" - என்பார்சிற்பி. சகுந்தலை கதையைப் பொறுத்த மட்டில்துஷ்யந்தன் ஒரு வில்லன்தான். மகாபாரதத்தில் துஷ்யந்தன் சகுந்தலையை நேசித்துக் கலந்துவிட்டுப் பிரிந்து போய்விடுகிறான். ஆனால் காளிதாஸன் துஷ்யந்தனைக் காப்பாற்ற வேண்டும்' என்பதற்காக துர்வாசர் என்கிற பாத்திரத்தைப் படைக்கிறான். இது மகாபாரதத்தில் கிடையாது. காளிதாஸ்னே படைத்த பாத்திரம் இது. துர்வாசர் வருகிறபோது சகுந்தலை அவருக்குச் சரியாக உபசாரம் செய்யவில்லை என்று காரணம் காட்டி அதனால்துர்வாசர் நீயாரைநினைத்துக் 57