பக்கம்:கவிதை ஒரு கலந்துரையாடல்.pdf/61

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இதுமாதிரி, கவனிக்கப் படாமலிருக்கிற விஷயங்கள் எத்தனையோ நம் அன்றாட வாழ்வில் இருக்கின்றன. 'Modernity in Content Q36b Q(5&6pG#1–91;&hugo, சமூக ரீதியாக மட்டுமின்றி தனி மனித வாழ்வியல் நோக்கிலும் கவிதைக்குப் புதிய கருத்தோட்டங்கள் தேவை, இல்லையா? - மீரா: தமியள் மூத்தற்று.." என்று திருவள்ளுவர் சொன்னார். பணக்காரன் வீட்டுச் செல்வமானது மூப்படைந்து தனியாக இருக்கும் பெண் போன்றது என்றார் அவர். இதையே காமராசன் சொல்கிறபோது 'முதிர் கன்னிகள் என்று கூறினார். எனக்குத் தெரிந்து இந்த முதிர்கன்னிகளைப் பற்றி முதன்முதலில் கவிதை எழுதியவர் இவர்தான். ஒரு புதிய விஷயத்தை சொல்லியிருக்கிறார். இதைப் பற்றிக் கவிதை பாடவேண்டும் என்கிற உணர்வு எந்தக் கவிஞருக்கும் இதுவரை ஏற்பட்டதில்லை. இது கவிதைக்குரிய ஒரு பிரச்னை என்றுகூட எவரும் எடுத்துக் கொண்டதில்லை. இந்த சூழ்நிலையில் காமராசன் இந்தப் பிரச்னையை எடுத்துக் கொண்டது ஒரு Modernity grair. பாலா: கவிதையின் செய்தியை நாம்தான் தேர்ந்தெடுத்துக் கொள்ளவேண்டும். ஆனால் இன்றைக்குத் தமிழ்நாட்டில் பற்றி எழுதுகிற வியாதி” அதிகமாகியிருக்கிறது. ஒரு கவிதை எழுதுகிற தென்றால் எதைப் பற்றி எழுதுவது? கலப்படம் பற்றியா, வரதட்சணை பற்றியா. யுத்த அபாயம் 59