பக்கம்:கவிதை ஒரு கலந்துரையாடல்.pdf/62

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பற்றியா...? என்று பல பற்றிகளைப்பற்றிக்கொண்டு இருக்கிறார்கள். இன்றைய புதுக்கவிதையின் முதல் அம்சம் கவித்துவம். கருத்தும் புதிதாக இருக்க வேண்டும், அந்தக் கவித்துவத்திற்கு ஈடு கொடுக்கிற மாதிரி. ஆனால் இன்றைய கவிஞர்கள் என்னசெய்கிறார்கள்? வெற்றியடைந்த கவிதைகளை வெற்றியடைந்த கவிஞர்களை நகல் எடுக்கிற பாணியில் எழுதுகிறார்கள். 'இன்று காதல் கவிதைகளுக்கு இளைஞர் மத்தியில் ஈர்ப்பு இருக்கிறது. ஆகவே நாமும் ஒரு காதல் கவிதை எழுதிவிட வேண்டும்' என்று எண்ணுகிறார்கள். இது மாதிரி வெறும் காதல் கவிதைகளாகவே தொகுப்பு நூல்கள் வெளிவந்து விடுகின்றன. ஒரு வெற்றியடைந்த கவிஞனின் பாணியை அப்படியே நகல் எடுக்கும் மனோபாவத்தை இன்றைய இளைஞர்களிடையே நாம் பார்க்கிறோம். இது ரொம்பவும் அபாயகரமானது. கவிதைக்கும் அவர்களது கவிதை வாழ்வுக்கும் அபாயகரமானது. மீரா இதற்குக்காரணம்தன்னம்பிக்கை இல்லாமல் போவதுதான். முதலில் தான் ஒரு கவிஞன் என்பதில் அவன் நம்பிக்கை வைக்கவேண்டும். பதினாறு வயதிலேயே பாரதி 'கவிமேகம் பாடாது' என்று சொன்னான் என்றால் அவனது தன்னம்பிக்கைதான் அதற்குக்காரணம். கரந்தைத் தமிழ்ச் சங்கத்தில் 'பாடாதே" என்று சொன்னார்கள். சுதேசமித்திரன் பத்திரிகையில் "இனிமேல் நீ கவிதை எழுதாதே... 60