பக்கம்:கவிதை ஒரு கலந்துரையாடல்.pdf/64

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒரு வசன காவியத்தை நாமும் படைக்க வேண்டும் என்று தோன்றியது. ஆனால் ஜிப்ரான் அதை கதைப் பாங்காகவே சொல்லியிருக்கிறார். அதே மாதிரி நான் செய்திருந்தே னென்றால் எனக்குத் தோல்விதான் கிடைத்திருக்கும். என்னுடைய கனவுகள்கற்பனைகள் காகிதங்கள் கவிதைத் தொகுதியை ஒரு முன்னுதாரணமாக வைத்துக் கொண்டு இன்றைக்கு வரையிலும் முப்பது நாற்பது காதல் தொகுதிகளை எழுதிவிட்டார்கள். நான் எழுதியது மாதிரியே.1,2,3,4,5 என்று எழுதி என்னிடமே கூட இரண்டு மூன்று பேர். முன்னுரையும் கேட்டு வாங்கி விட்டார்கள். இந்த நூல் வெளிவந்த போது கவிஞர்சுரதா கூட இது மாதிரி நூறு புத்தகங்கள் வந்துதான்ஒயும் என்று சொன்னார். நான் முறிந்த சிறகுகள் படித்திருந்தால்கூட தாகூரின் கீதாஞ்சலி’யும் மனதை ஈர்த்திருந்தது. இவற்றின் பாதிப்புகளில் என்னுடைய பாணியில் முயற்சி செய்தேன். மற்றவர்களிடமிருந்து வித்தியாசப்பட வேண்டும் வெற்றி பெறவேண்டும் என்று நினைத்துச் செயல்பட்டேன், யாப்பிலக்கணத்துக் கட்டுப்பட்டு எழுதவேண்டும் என்று எண்ணாமல் வசன கவிதையில் எழுத வேண்டும் என்று முடிவு செய்தேன். இந்த உணர்ச்சிகளைப் பிரதிபலிப்பதற்கு வசனகவிதை தான் பொருத்தம் என்றும் தோன்றியது. எனது கருத்துக்கேற்ற வடிவத்தைத் தான்நான் தேர்ந்தெடுத்துக் கொண்டேன். புதிதாக எழுத வருகிறவர்கள் தங்களது கருத்துக்கேற்ற வடிவத்தைத்தான்தேர்ந்தெடுத்துக்கொள்ளவேண்டும். 62