பக்கம்:கவிதை ஒரு கலந்துரையாடல்.pdf/68

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

'நல்ல பெண்ணடி நீ. முகத்திரையை இழுத்துவிட இரண்டு வாரம் முகத்திரையை எடுத்து விட இரண்டு வாரம். வேறு வேலையே இல்லையா உனக்கு...' பாலா: இதில்கூட மரபுரீதியாக நிலவை ஒரு பெண்ணாகப் பார்த்துத்தானே எழுதுகிறார். யாரும் நிலவை ஆணாகப் பார்த்ததில்லையே! மீரா: இல்லை. கண்ணதாசன் ஒரு திரைப்படப்பாடல் எழுதியிருக்கிறார். 'பகலிலே சந்திரனைப் பார்க்கப் போனேன். அவன் இரவிலே வருவதாக ஒருத்தி சொன்னாள்..." என்று ஒரு கதாநாயகி பாடுவதான பாடல் இது. சர்க்கஸ் கம்பெனியில் கதாநாயகன் வேலைப் பார்ப்பவன். பெயர் சந்திரன். அவனை கதாநாயகி பகல்நேரத்தில் தேடிப் போகிறாள். அங்குள்ள ஒரு பெண் அவன் இரவில் சர்க்கஸில் தோன்றுவான் என்கிறாள். இது நிலவையும் குறிக்கிறது. அவள் நினைவில் நின்றவனின் இயல்பையும் குறிக்கிறது. பாலா: புதிதாக எழுதுகிறவர்கள் இரண்டுExtreme க்கும் போய்விடக்கூடாது. வார்த்தை வளம்' என்ற 66