பக்கம்:கவிதை ஒரு கலந்துரையாடல்.pdf/69

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பேரில் மரபான சொற்களையே கொடுத்துக் கொண்டிருக்கக் கூடாது. புதுமொழி என்ற பேரில் வறட்சியான வார்த்தைகளையும் கொடுத்துவிடக் கூடாது. பிச்சமூர்த்தி கவிதைகளையெல்லாம் பார்த்தால் அவரிடம் மொழி அருமை அதிகம் இல்லை என்பதுபோல்தான் தோன்றுகிறது. பாரதியும் இவரும் கிட்டத்தட்ட ஒரேகாலகட்டத்தில் எழுதியவர்கள்தான். பாரதிக்குக் கிடைத்த மொழி அருமை பிச்சமூர்த்திக்கு வரவில்லை. அல்லது இது பிச்சமூர்த்தியே விரும்பி ஏற்றுக் கொண்டதாகக் கூட இருக்கலாம். இரா.வே. ஞானக்கூத்தன், சி.மணிபோன்றவர்கள் stgögurrtò Un romantic Language o LGun@#@prtfissit. இதை இவர்கள் Purpose ஆகச் செய்கிறார்களா? இயல்பா கவே செய்கிறார்களா? அல்லது இயலாமையில் செய்கிறார்களா? மீரா: இவர்கள், வார்த்தைகளில் அதிக கவனம் செலுத்த வேண்டியதில்லை. அதில் அலங்காரமாகவும் கவர்ச்சியாகவும் அழகுபடுத்திச் சொல்லவேண்டிய அவசியமில்லை. சொல்லக் கூடிய கருத்து, சொல்லும் முறை இதுபோதும் என்பார்கள். . பாலா. அலங்காரம் கவிதைக்கு தேவையில்லை தான். மீரா: உதாரணத்துக்கு பாலகுமாரனின் ஒரு கவிதையில் ஒரு பதப் பிரயோகம். அவள் 'வீட்டிலிருக்கக் கூடிய பெண். அப்பா வேலைக்குப் போகக்கூடாதா என்பார். அம்மா மாப்பிள்ளை 67