பக்கம்:கவிதை ஒரு கலந்துரையாடல்.pdf/72

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இருக்கலாம். Obscure என்று சொல்லலாம். ஆனியம் என்ற கவிதை Obscure என்று சொல்ல முடியாவிட்டாலும் Popular theme அல்ல. ஆனாலும் அவர் அவருக்கேயுரிய தனிதன்மை யோடு அதைக் சொல்லியிருக்கிறார். ᏞᎥ IᎢöa JᎢ ; 'அரசியல் ரீதியான கவிதைகள் எழுதுபவர்கள்தான் உண்மையான மக்கள் கவிஞர்கள் என்று சிலபேர் சொல்கிறார்கள். 'காதலைப் பற்றி, தனிமனித அவலங்களைப்பற்றி எழுதுவதற்கெல்லாம் கவிதை என்கிறStatus ஐக் கொடுக்க முடியாது’ என்றும் ஒரு நல்ல கவிதை சமூகக் கடமையை நிறைவேற்றுவதுதான் என்றும் சிலர் கருதுவதைப் பார்த்தால் 'கவிதைகள் என தேறுவது மிகச் சிலவாகத்தானிருக்கும். பாரதி சமூகக் கடமையாகதான் எண்ணி எழுதியிருக்கிறார். அதே சமயம் அவரது தனிப்பட்ட உணர்வுகளையும் எழுதியிருக்கிறார். 'பாரதசமுதாயம் எழுதிய பாரதிதான் காணி நிலம் வேண்டும் என்ற கவிதையையும் எழுதியிருக்கிறார். ஒரு நல்ல கவிதை என்பது ஒரு கவிஞனது அரசியல் சித்தாந்தப் படியும் அமையலாம். ஒரு சமூகத் தேவைக்குச் சாணை பிடிப்பதாகவும் கவிதை அமையலாம். அதே சமயம் நல்ல கவிதை ஆரோக்யமான ஒரு மனிதனின் இருத்தல்' (Existence) பற்றியதாகவும் இருக்கலாம். மீரா: பிரச்சாரம், அரசியல் இவற்றைப் பாடுகிறவர்களும் இருக்கிறார்கள். பிரச்சாரத்திலும் 70