பக்கம்:கவிதை ஒரு கலந்துரையாடல்.pdf/73

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கவிதை இருக்கிறது. அரசியலிலும் கருத்து இருக்கிறது. எந்தக் கருத்தானாலும் அதை வலிமையாகச் சொல்கிறபோதும், கவித்துவம் இணைகிறபோதும் கவிதையாகி விடுகிறது. உண்மையான நம்பிக்கை - சத்தியம் உள்ளவன் மட்டுமே உயிர்த்துடிப்போடு அரசியல் கவிதை எழுத முடியும். தமிழ்நாட்டில் இப்படி எழுதுகிறவர்கள் என்று எடுத்துக் கொண்டால் இன்குலாப்பைத் தவிர யாரையும் காணோம். அவர் சொல்கிற கருத்துக்களை உண்மையாகச் சொல்கிறார் - அவற்றில் ஈடுபட்டுச் சொல்கிறார் - அவற்றில் நம்பிக்கை வைத்துச் சொல்கிறார். புதிதாக ஒரு கவிஞன் கவிதை படைக்க வேண்டும் என்று விரும்பினால் அவர் மாதிரியான ஒரு நம்பிக்கையைத் தனக்குள் வளர்த்துக் கொள்ள வேண்டும். வெறும் வேடம் போட்டுக் கொண்டு, சோஷலிஸம் ஒரு நல்ல விலைபோகிற சரக்கு. இதை வைத்துக் கொண்டு ஒரு பத்துப் பதினைந்து கவிதைகள் எழுதவேண்டும் என்று மனோபாவம் பெருகினால் நகல் கவிஞர்கள் தான் உருவாக முடியுமே தவிர சத்தியமான கவிஞர்கள் அவதரிக்கவே முடியாது. சத்தியமானகவிதைகளும் பிறக்காது. பாலா; இன்குலாப் பற்றிச் சொன்னீர்கள். அவரிடம் கூட முதற்கவிதை தொகுதியில் இருந்த 71