பக்கம்:கவிதை ஒரு கலந்துரையாடல்.pdf/8

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அவர்தம் கவிதைச் சிந்தனைகள் நூல் முழுதும் பரக்கச் காணலாம். கவிஞர்மீராவின்நிதானமானஅழுத்தமான கூர்மையான கவிதைக் கருத்துக்களும் அவற்றைக் கிளத்தும் பாலாவின் கேள்விகளிலும் சர்ச்சைச்குரிய கருத்துரைகளும் கவிதை நேயர்கள் ஆய்வாளர்க்கு மட்டுமின்றி இளங்கவிஞர்க்கும் பயன்தருவன. = கவிதை மரபு என்றால் என்ன? =மரபு - புதுமை பற்றிய பார்வை எத்ததையதாக இருக்க வேண்டும். -பேரிலக்கியங்களின் புகழ்ப் பெருமை புது விளைச்சலுக்குத்தடைக்கல்லா? படிக்கல்லா? =பழங்கதைப் புத்துருவாக்கம் படைப்பாவது எப்போது? - =கவிஞர்கள் பிறக்கிறார்களா? உருவாக்கப் பெறுகிறார்களா? - கவிதையைக் கற்றுத்தர இயலுமா? = கவிதையில் உருவும் உள்ளடக்கமும் எப்படிப் பொதிந்து நிற்கிறது? அகவித்துவம் என்றால் என்ன? =கருத்து முக்கியமா, கவித்துவம் முக்கியமா? -நவீனத் தன்மை என்றால் என்ன? எதில் உள்ளது நவீனத்தன்மை?, = சொற்களில் புத்தாக்கம் நன்றா?